விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2017 12:11
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் மண்டியுள்ள செடிகளை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் மண்டியுள்ள செடிகளால் அதிலுள்ள சிற்பங்கள் சிதைந்து, கீழே விழுந்து சேதமடையும் நிலை உள்ளது. பழமையான கோவில்களில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கோபுரங்கள் செடி கொடிகள் மண்டி, கோபுரங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கோபுரங்களில் மண்டியுள்ள செடிகளை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.