பதிவு செய்த நாள்
28
நவ
2017
01:11
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில், மெய்கண்ட சித்தர் குகை அருகே சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று, இக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மெய்கண்ட சித்தர் குகையில், வேதி தீர்த்தம் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கு, விசஷே பூஜைகள் நடந்தது. பின்னர், மூலவருக்கு சங்காபிஷேக பூஜை நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதி திருமூலநாதர் கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.