கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நெல்லி மரத்திற்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2017 01:11
திண்டிவனம்: திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத நெல்லி மர பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் அலங்கரிக்கப்பட்ட நெல்லி மரத்திற்கு, திண்டிவனம் ஆர்ய வைஸ்ய மகளிர் குழுவினர், சிறப்பு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் வாசவி கிளப் துணை ஆளுநர்கள் சிவக்குமார், வெங்கட்ரமணன், சங்கர், வட்டாரத்தலைவர் பிரபாகரன், பொருளாளர் பாரதிபாஸ்கரன், மகிளா விபாக் தலைவர் வித்யாசிவக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை, வாசவி வனிதா சங்கத்தின் முன்னாள் தலைவர் சாந்திபாபுரமஷே் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.