சபரிமலை: பம்பையில் பக்தர்கள் குளிக்க வசதியாக ஏழு தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. பம்பையில் குளிப்பதால் பாவங்கள் களையப்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளிப்பதால், தண்ணீர் குறையும் நேரத்தில் சிரமம் ஏற்படுகிறது. இதை போக்கும் வகையில் தற்போது பம்பையில் திருவேணி, வண்டாரக்காயம், வாட்டர் அதாரிட்டி, ஸ்ரீராமபாதம், கே.எஸ்.ஆர்.டி.சி., நுணங்ஙாறு, திருவேணி பாலம் ஆகிய ஏழு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுஉள்ளன.பம்பையில் வழக்கமான தண்ணீர் ஓட்டம் குறைந்தால் மின்வாரியத்தின் குள்ளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் பம்பையில் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்திருந்தது. ஆனால் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் தண்ணீர் குறைவு ஏற்படவில்லை. தொடர் பிரசாரம் காரணமாக இந்த ஆண்டு பம்பையில் பக்தர்கள் ஆடைகளை வீசுவது குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.