சபரிமலை: 11 நாட்களில் சபரிமலை வருமானம் 42 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட 8.90 கோடி அதிகமாகும். சபரிமலையில் கடந்த 16-ம் தேதி மண்டல கால பூஜை கால துவக்கம் தினமும் பக்தர்கள்கூட்டம் அலைமோதுகிறது. சனி, ஞாயிறு கூட்டம் மேலும் அதிகரிக்கிறது. இதற்கேற்ப வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் மொத்த வருமானம் 42 கோடி ரூபாய். கடந்த ஆண்டு இதே கால அளவில் வருமானம் 33.09 கோடியாக இருந்தது. பல்வேறு வகைகளில் கிடைத்த வருமானம் வருமாறு: கடந்த ஆண்டு வருமானம் அடைப்புக் குறிக்குள். அப்பம்- ரூ.3.06 கோடி (2.70), அரவணை 18.17, (13.61), காணிக்கை 14.30 கோடி (11.31), அபிஷேகம் 35.54 லட்சம் (35.03), சர்க்கரை பாயாசம் 12.97 லட்சம் (11.16), அபிஷேக நெய் 24.82 லட்சம் (17.91), அறை வாடசை 1.06 கோடி (93.95).