கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2017 12:11
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் இன்று(29ம் தேதி) ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு திரவிய அபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி காலை 6:00 மணிக்கு மஹாகணபதி ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து காலை 10:30 மணிக்கு விசேஷ திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடத்தி, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு, சுவாமி கொலுவிருத்தல், இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனையும், நடக்கிறது.