காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு இன்று (டிச., 14) நடக்கிறது.இதையொட்டி மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தேவகாண்ட்லா இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர்.* காவேரிப்பட்டணம் மெயின்ரோடு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். * தர்மபுரி நெசவாளர் நகர் ஸ்ரீ விநாயகர் வேல்முருகன் கோவிலில் மாலை 6 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.