பதிவு செய்த நாள்
14
டிச
2011
11:12
புதுச்சேரி : நாணமேடு சேஷா ஆசிரமத்தில் சனிப் பெயர்ச்சி மகா யாகம் வரும் 21ம் தேதி நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்த நாணமேட்டில் விஜய விஸ்வமாதா ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் சேஷா ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில், சனிப் பெயர்ச்சியையொட்டி, மகா யாகம் வரும் 21ம் தேதி நடக்கிறது. அன்று காலை 5.20 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து மகா சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி, குபேர, நவக்கிரக, சனீஸ்வர, நட்சத்திர, ருத்ர, காரியசித்தி ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து கோ பூஜை, வடுக, கண்யா, சுமங்கலி, தன, தான்ய, சவுபாக்கிய பூஜைகள், மகா தீபாராதனை நடக்கிறது. யாகத்திற்கான ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்து வருகிறார்.