கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 108 சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. இதனையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு 108 விசேஷ திரவியங்கள், 108 கனி வகைகள் மற்றும் 108 பூ மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில், திருக்கோவிலுார் நாதஸ்வர கலைஞர்களின் இசை விழா நடந்தது. நிகழ்ச்சிகளை அம்பி குருக்கள் மற்றும் குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.