பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
போடி, போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. போடியில் சகல சவுபாக்கியங்களையும் அள்ளித்தரும் வகையில் நகரின் மையப்பகுதியில் தாய்ஸ்தலம் ஸ்ரீமது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. 1850ல் தேவாங்கர் சமுதாயத்தால் கட்டப்பட்ட கோயிலாகும். அம்மனின் வலது புறத்தில் லிங்கம் உள்ளதால் ஸ்ரீமது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் என அழைக்கப்படுகிறது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடந்தது. கும்பாபிஷேகம் தேவாங்கர் குல ஜெகத்குரு ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகாசுவாமி தலைமையில், சிவசக்தி சண்முக சாஸ்திரிகள் முன்னிலையில் நேற்று காலை 8:10 மணிக்கு நடந்தது. கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் பவுன்தாசன், பொருளாளர் குமரேசன், உபதலைவர் தேவநாதன், இணை செயலாளர் பிரசாத் மற்றும் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், வாலிபர் சங்க தலைவர் தேவநாதன், செயலாளர் ஜெயக்கண்ணன், பொருளாளர் தியாகராஜன், உபதலைவர் சம்பத், இணை செயலாளர் பாஸ்கரன், கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், அசோக்குமார், மாதர்சங்க தலைவர் காஞ்சனா, செயலாளர் மல்லிகா, பொருளாளர் அன்னகாமு, துணைத்தலைவர் கமலவேணி துணை செயலாளர் சேதுலட்சுமி , கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில் சேவா சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பாஸ்கரன், உபதலைவர் அசோக்குமார், உபசெயலாளர் காந்தி, ஜி அக்ரோ டிரேடர்ஸ் உரிமையாளர்கள் ரமேஷ், அமர்நாத், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், ஏ.பி. அக்ரோ உரிமையாளர் பாலகிருஷ்ணன், கடுவா நலச்சங்க நிர்வாகிகள், சந்தியா ஸ்பைசஸ் உரிமையாளர்கள் சம்பத், பாலாஜி, பொன்னையா ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார், கான்பூர் சிவசங்கர் ஸ்பைசஸ் உரிமையாளர் குமார், வி.வி.செராமிக்ஸ் உரிமையாளர் வாசகன், துரை பல்மருத்துவமனை டாக்டர் சண்முகப்ரீத்தி, கிரீன் ராயல் ஓட்டல் அன்டு ரிசார்ட்ஸ் நிர்வாக உறுப்பினர்கள் செல்வம், பாபு மற்றும் அன்னதான கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.