சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சம் தீப வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2017 10:12
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு லட்சம் தீப விளக்குகள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று சவுந்திரராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மகா தீபம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலை சுற்றி ஒரு லட்சம் கார்த்திகை தீபம் விளக்குகளை பக்தர்கள் ஏற்றினர். அதன்பின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.