பதிவு செய்த நாள்
04
டிச
2017
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவில், அர்த்த நாரீஸ்வரரை போற்றும் வகையில், கமலா பீடத்தில், திருநங்கைகளுக்கு பாத பூஜை செய்து, ஆசி பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவண்ணாமலை அடுத்த, சக்கரதாமடை கிராமத்தில் அமைந்துள்ள கமலா பீடத்தில், தீப திருவிழாவை முன்னிட்டு, அர்த்தநாரீஸ்வரரை போற்றும் வகையில், ஏழாவது ஆண்டாக, திருநங்கைகளுக்கு பாத பூஜை செய்து, ஆசி பெறும் நிகழ்ச்சி, சீனுவாசன் சுவாமி தலைமையில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்களுக்கு, பக்தர்கள் பாத பூஜை செய்து, வஸ்திர தானம், மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற பொருட்களை வழங்கி, அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினர். திருநங்கைகள் அட்சதை தூவி, பக்தர்களை வாழ்த்தினர். இதில், 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.