பதிவு செய்த நாள்
04
டிச
2017
12:12
ஆர்.கே.பேட்டை:காட்டு வழியே, சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள், அதற்கான சக்தியை அளிக்க வேண்டி, நேற்று, சக்தியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தினர். கார்த்திகை மாதத்தில், சபரிமலைக்கு விரதம் இருந்து பயணம் மேற்கொள்வது அய்யப்ப பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பம்பை நதிக்கரையில் இருந்து, காட்டு வழியே கடினமான பாதையை கடந்து, சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இதற்காக, துளசி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர். தினமும், காலை, மாலையில், சிறப்பு படி பாட்டு மற்றும் சுவாமி வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். அம்மனேரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை, கிராமத்தின் கிழக்கில் உள்ள சக்தியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். சபரி மலையேற்றத்திற்கான சக்தியை அளிக்க வேண்டி கொண்டனர். இதே போல், ஆர்.கே.பேட்டை, செல்வ விநாயகர் கோவிலில், நேற்று இரவு, அய்யப்ப பக்தர்களுக்கு, குருசாமி இருமுடி கட்டி, சிறப்பு பூஜை நடத்தினார். அதிகாலையில், சபரி மலையை நோக்கி, தங்களின் ஆன்மிக பயணத்தை துவங்கினர்.