பதிவு செய்த நாள்
04
டிச
2017
12:12
ஊத்துக்கோட்டை:தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோவிலில், வரும், 10ம் தேதி, பைரவர் ெஜயந்தி விழா நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். இக்கோவில் சீரமைக்கப்பட்டு, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதத்தில், பைரவர் ெஜயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை, 6:00 மணிக்கு, மகா கால பைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு பிராத்ஹ் கால அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவ பைரவ கலச ஆராதனை, 64 பைரவ கலச ஆராதனை நடைபெறும். உச்சிகால அபிஷேகத்திற்கு பெருமாள் கோவிலில் இருந்து, திருவாபரணம், திருக்குடை, திருப்பாற்குடங்கள் புறப்பாடு, உற்சவ பைரவர் கிரிவலத்துடன் அஷ்டதிக்கு ஆராதனை, 64 கலச புறப்பாடு மற்றும் உச்சிகால அபிஷேகம், வெள்ளி காப்பு சாற்றுதல், உற்சவருக்கு ஊஞ்சல் சேவை, திருக்குடை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிற்பகல், 3:00 மணிக்கு, அஷ்ட பைரவ பீஜாஷ்ர ஹோமம், காப்பு கட்டி மாலை அணிந்து அலங்கரிக்கப்பட்ட பைரவமார்கள் மூலம் நவ பைரவ கலச புறப்பாடு, அஷ்ட பைரவர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.