பதிவு செய்த நாள்
05
டிச
2017
01:12
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள, ஓங்காளியம்மன் கோவிலில், தண்ணீரில் விளக்கு எரிந்ததை, பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பள்ளிபாளையம், ராஜ்வீதி பகுதி காவிரி கரையோரத்தில், 24 தெலுங்கு மனை செட்டியார் சமுதாயத்திற்கு சொந்தமான ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று, 7:00 மணிக்கு தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் நடந்தது. ஒரு மண் விளக்கில், தண்ணீர் ஊற்றி, திரியை வைத்து தீ பற்றி வைக்கப்பட்டது. விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்த அதிசயத்தை ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பார்த்தனர். பின்னர், ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.