காரியாபட்டி : திருச்சுழியில் திருமேனிநாதர் சமேத துணை மாலை அம்மன் ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.கோயில் நிர்வாக அதிகாரி கணேசன் தலைமை வகித்தார். வக்கீல் தினேஷ்பாபு, முக்குலத்தோர் சங்க தலைவர் வீரபாண்டித் தேவர், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் கொப்பையாராஜ் முன்னிலை வகித்தனர். மதுரை ஐகோர்ட் கிளையின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. திருமேனி நாதர், அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சாமிகள் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.