பந்தலுார் தேவாலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2017 01:12
பந்தலுார்: பந்தலுார் புனித பிரான்சிஸ் சவேரியர் தேவாலய, 66ம்ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சிறப்பு திருப்பலியும், 9:30மணிக்கு திருச்சி கிரேஸ்தியான இல்ல இயக்குனர் இரபெல்குத்துார் தலைமையில் கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, 9ம்தேதி வரை காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி, உபவாச தியானம், ஜெபமாலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 10ம்தேதி காலை, 9:30மணிக்கு ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பகல், 12:00 மணிக்கு அன்பின் விருந்து, மாலை, 5:30 மணிக்கு மலையாளத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வில்சன் தலைமையிலான பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.