Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை படி பூஜை 2034 வரை முன்பதிவு சபரிமலையில் குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி: பம்பையில் தாய்மார்கள் பிரார்த்தனை சபரிமலையில் குழந்தைகளுக்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் டிச. 26ல் மண்டலபூஜை: 22ல் தங்க அங்கி பவனி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் டிச. 26ல் மண்டலபூஜை: 22ல் தங்க அங்கி பவனி

பதிவு செய்த நாள்

08 டிச
2017
11:12

சபரிமலை: சபரிமலையில் டிச. 26ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி டிச. 22-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.

பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. டிச. 22-ம் தேதி காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயி லிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. 22-ம் தேதி ஓமல்லுார் பகவதி கோயில் 23-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயில், 24-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயில்களில் தங்கும் இந்த பவனி டிச. 25ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை 3:00 மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னி தானத்துக்கு கொண்டு வரப்படும். டிச.25 மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar