பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
ஈரோடு: ஈரோட்டில், பாரதி சிந்தனை கழகம் சார்பில், பாரதியார் பிறந்த தின விழா, மூன்று நாள் சொற்பொழிவு துவங்கியது. இதில் சென்னை ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவரங்கன் உலாவும், மதுரா விஜயமும் என்ற தலைப்பில், நேற்று பேசியதாவது: தமிழகத்திலும், இந்தியாவிலும் வாணிபத்துக்காக முஸ்லிம்கள் வந்தனர். அவர்கள் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. துருக்கியில் இருந்து வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் அலாவுதீன் கில்ஜி, மாலிக்காபூர் போன்றவர்கள், தமிழக வளங்களை கைப்பற்றவும், கோவில்களை அகற்றி, அங்குள்ள விலை உயர்ந்த சிலைகள், பொருட்களை கொள்ளையடிக்கவும் வந்தனர். இஸ்லாமியர் ஆட்சியின்போது, 60 ஆண்டுகள் ரங்கநாதர் கோவில், சிதம்பரம் கோவில், 48 ஆண்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பூஜைகள் நடத்தப்படாமல், மூடிக்கிடந்தன. தமிழர்கள், சோழர்கள் கட்டிய கோவில்கள் இடிக்கப்பட்டன. விஜயநகர பேரரசு ஆட்சியின்போது, கம்பன் உடையார் போன்றோர், இக்கோவில்களை புனரமைப்பதையே, ஆட்சியின் நோக்கமாக கொண்டனர். அழிவில் காப்பாற்றப்பட்ட சுவாமிகளை மீண்டும் நிறுவ, பல சிரமங்களை தீட்சிதர்கள் உட்பட பலரும் சந்தித்தனர். சமயத்துக்கும், வழிபாட்டுக்கும் விரோதிகளையும், இணக்கமானவர்களையும், இந்துக்கள் என்றும் நினைவில் கொள்ள தவறியதில்லை. இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு, பெருந்துறை ரோட்டில் இன்றும், நாளையும் மாலை, 6:15 மணிக்கு சொற்பொழிவு நடக்கவுள்ளது.