பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், செயல் அலுவலர் மாற்றப்பட்டார். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், வகையறா கோவில்களின், செயல் அலுவலர் விமலா, கடந்த ஆண்டு பதவி உயர்வில் இடம் மாற்றப்பட்டார். இதன் பிறகு, கோவிலுக்கு தனியாக செயல் அலுவலர் நியமிக்கவில்லை. கொடுமுடி, வெங்கம்பூர் வேணுகோபாலசுவாமி கோவில், செயல் அலுவலர்கள், சந்திரன் மற்றும் முத்துசாமி ஆகியோர், கூடுதல் பொறுப்பு ஏற்றனர். சந்திரன் பொறுப்பில் இருந்தபோது, கோவில் கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று வரை ஏலம் நடக்கவில்லை. முத்துசாமி பொறுப்பேற்ற பின், தெப்பக்குளம் தோண்டும் பணி, பெருமாள் கோவில் முன்புள்ள அரசமரம் அகற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், முத்துசாமி விடுவிக்கப்பட்டு, பவானி செல்லியாண்டியம்மன் கோவில், செயல் அலுவலர் கங்காதரன், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலின், புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.