கும்மிடிப்பூண்டி: அய்யப்ப பக்தர்கள் சார்பில், கவரைப்பேட்டையில் நடந்த மலர் பூஜை விழாவில், அய்யப்பன் வீதிஉலா சென்று அருள்பாலித்தார். கவரைப்பேட்டை பகுதியில் உள்ள அய்யப்ப பக்தர்கள் சார்பில், அங்குள்ள ஸ்ரீதேவி பவானி புத்தியம்மன் கோவிலில், அய்யப்பன் மலர் பூஜை விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு, செண்டை மேளம் முழங்க, சிறப்பு மலர் அலங்காரத்தில், அய்யப்பன் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கவரைப்பேட்டை பகுதியில், மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுவரும், 150 அய்யப்ப பக்தர்கள், ஊர்வலமாக சென்றனர். பகுதி மக்கள் அய்யப்பனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.