பதிவு செய்த நாள்
13
டிச
2017
12:12
திருப்போரூர்:திருப்போரூர், அய்யப்பன் கோவிலில், 40ம் ஆண்டு மகர விளக்கு பூஜை நேற்று விமரிசையாக நடந்தது.விழா, காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. மூலவர் அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.பகல், 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், புலி வாகனத்தில் எழுந்தருளிய அய்யப்ப சுவாமி, திருப்போரூர் மாட வீதிகளில் வலம் வந்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றின