திண்டுக்கல்:சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 26 ல் மண்டலபூஜை மற்றும் ஜன.14 ல் மகர விளக்கு பூஜை நடக்க உள்ளது. இதற்காக திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக டிச.15 முதல் ஜன.16 வரை குமுளிக்கும், அங்கிருந்து சபரிமலைக்கு செல்ல கேரள போக்குவரத்து கழகமும் தேவைக்கேற்ப பஸ் வசதியை ஏற்படுத்தியுள்ளது. மண்டல பூஜைக்கு 100 பஸ்களும், மகர விளக்கு பூஜைக்கு தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழிகாட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.