பதிவு செய்த நாள்
13
டிச
2017
12:12
கொடுமுடி: ஏமகண்டனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கொடுமுடி அருகே, ஏமகண்டனூரில், ஈரோடு பிரதான சாலையில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதத்தில் பொங்கல் விழா நடக்கிறது. கடந்த,5ல் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. நேற்று முன்தினம், கிராமிய நடனத்துடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, 7:00 மணிக்கு அலகு குத்துதல் மற்றும் கிடா வெட்டுதல், மாலை, 6:00 மணிக்கு பொங்கல் வைபவம், மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை காலை, மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.