பதிவு செய்த நாள்
13
டிச
2017
12:12
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த, சாலவாக்கம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை நான்காவது சோமவாரத்தையொட்டி, நேற்று முன்தினம், 108 சங்காபிஷேகம் நடந்தது. திருமகள் சொர்ணமலரால் சிவபெருமானை பூஜித்து, சொர்ண நிறம் பெற்ற தலமாக, சொர்ணபுரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இதனால், இக்கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபடுவோருக்கு, தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்குவதாக ஐதீகம்.இக்கோவிலில், கார்த்திகை மாத, நான்காவது வார சோமவாரத்தையொட்டி, 108 சங்கு, கலச பூசை நடந்தது.பின், மூலவர் சொர்ணபுரீஸ்வரருக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.