பதிவு செய்த நாள்
16
டிச
2011
10:12
தூத்துக்குடி: மார்கழி மாதத்தையொட்டி, 17ம் தேதி முதல் திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடக்கிறது. 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடக்கிறது. காலை ஆறு மணிக்கு கால சந்தி பூஜையும், 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேம், தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜைக்குப்பின் கோயில் நடை திருக்காப்பிடப்படும். ஜன.,14ம் தேதிவரை இந்த பூஜைமுறை அமலில் இருக்கும். ஆனால், ஆங்கிலப்புத்தாண்டையொட்டி ஜன.,1ம்தேதி அதிகாலை ஒரு மணிக்கும், திருவாதிரை, ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜன.,8ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதுபோல, ஜன.,15ம் தேதி தைப்பொங்கலையொட்டி நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படும். இத்தகவலை கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.