பதிவு செய்த நாள்
16
டிச
2017
01:12
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் டிச.,23 முதல் 31 வரை நடக்கிறது.
இந்நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி, அங்கு தைலகாப்பு, தீபாராதனை முடிந்து, புறப்பாடாகி சித்திரை வீதிகள் சுற்றி கோயில் சேர்த்தியாகும். டிச.,30ல் கோரதம், டிச.,31ல் கனக தண்டியலில் அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடக்கிறது. திருவாதிரை நாளான ஜன.,1ல் பொன்னூஞ்சல் மண்டபத்தில் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதி சுற்றி வந்து சேத்தியாகும்.
திருவெண்பா உற்ஸவம் டிச.,24 முதல் ஜன.,1 வரை நடக்கிறது. உற்ஸவ நாட்களில் மாணி க்கவாசகர் சுவாமிகள் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந் தருளி தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாராதனை முடிந்த பின் ஆடி வீதிகள் சுற்றி வரும்.
ஜன.,1ல் பொன்னூஞ்சல் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமிகள் சன்னதியில் திருவெண் பா பாடி முடிந்தவுடன் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்த ருளி ஆடி வீதிகளில் சுற்றி வந்து சேர்த்தியாகும். எண்ணெய் காப்பு, திருவெண்பா உற்ஸவ நாட்களில் கோயில், உபயதாரர் சார்பில் உபய தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய வை பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.