பதிவு செய்த நாள்
16
டிச
2017
01:12
கோவை: மார்கழி மாதம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கருதப்படுவதால், பெண்கள், பாவை நோன்பு நோற்பதிலும், ஆண்கள் பஜனை பாடல்களை இசைப்பதிலும் ஈடுபடுவர்.
சைவ சமயத்தை பின்பற்றுவோர் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையையும், மகாவிஷ்ணுவை வழிபடும், வைணவர்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களும், நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் பாராயணம் செய்வதோடு, கோவிலிலும் கோவிலைச்சுற்றிய தெருக்களிலும், இசை ஊர்வலங்களையும் நடத்துவர்.
இன்று சித்தயோகத்தில், சதுர்த்தசி திதியில், பரணி நட்சத்திரத்தில் மார்கழி பிறக்கிறது. ராம்நகர் கோதண்டராமர் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், சித்தாபுதூர் ஜெகன்நாதபெருமாள் கோவில், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணு கோபால சுவாமி கோவில், வைசியாள்வீதி வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில், ராமநாத புரம் நரசிங்கபெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தை ஒட்டி இசைநிகழ்ச்சிகளும், பஜனோ ற்சவங்களும், இசை ஊர்வலங்களும் நடைபெறுகின்றன.
மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, அறநிலையத்துறைக்கு சொந்தமான மற்றும் அதன் கட்டுப்பாட் டிலுள்ள வைணவ மற்றும் சைவக் கோவில்களில் சனிக்கிழமை காலை 4:00 மணிக்கு சுவாமி க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.