பதிவு செய்த நாள்
16
டிச
2017
01:12
பல்லடம்: உலகில் அமைதி நிலவ வேண்டும், மழை பொழி வேண்டுமென என்பதற்காக, பல்லடத்தில், வாழும் கலை குடும்பத்தின் சார்பில், ருத்ர பூஜை நடைபெற்றது.
பல்லடம், பி.எம்.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்த ருத்ர பூஜையை, சாத்வீ தனசெல்வி நடத்தி னார். பொள்ளாச்சியை சேர்ந்த முதுநிலை ஆசிரியர் சம்பத் முன்னிலை வகித்தார். பஜனை, பாடல்கள், மற்றும் ருத்ர ஜெபத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. விநாயகர், அம்பாள், விஷ்ணு உள்ளிட்ட சகல தேவதைகளுக்கான வழிபாடுகளை தொடர்ந்து, பால், தயிர், இளநீர், தேன் உட்பட பல திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி யில் பங்கேற்ற வாழும் கலை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.