பதிவு செய்த நாள்
16
டிச
2017
01:12
திருபுவனை: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த சோழர் கால கோவில் களை, அன்னதான திட்டத்தில் இணைப்பதுடன், சுற்றுலா தளமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி அடுத்துள்ள திருபுவனையில் வரதராஜ பெருமாள் கோயில், திருவாண்டார்கோயில் பஞ்சநாதீஸ்வரர் கோவில், மதகடிப்பட்டில் உள்ள திருகுந்தன்குழி ஈஸ்வரர் கோவில் ஆகிய 3 கோவில்கள் சோழர் காலத்தில் கட்டப்பட்டவை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
இக்கோவில்களின் தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலில் ஆவணம் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பழமை வாய்ந்த கோவில்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரி மாநிலத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ள திருபுவனை, திருவாண் டார்கோயில், மதகடிப்பட்டில் உள்ள இக்கோவில்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் கிராம அறங்காவல் குழு பராமரிப்பில் இருந்தாலும், எந்த வித முன்னேற்றமும் இன்றி, பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க கோவில்களை, புதுச்சேரி அரசு கண்டு
கொள்ளாமல் உள்ளது, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இக்கோவில்களின் சிறப்பு சுற்றியுள்ள மக்களுக்கே தெரியாத நிலையில் உள்ளது.
தற்போது, புதுச்சேரி அரசு, கோவில்களில், அன்னதான திட்டத்தை அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த திட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருபுவனை, திருவாண்டார்கோயில், மதகடிப்பட்டில் உள்ள கோவில்களை இணைப்பதுடன், சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.