பதிவு செய்த நாள்
16
டிச
2017
03:12
குமாரபாளையம்: குமாரபாளையம், ஐயப்பன் கோவிலில், 23ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா துவங்கியது.
குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், 23ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா மற்றும் மண்டல பூஜை, வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கொடியேற்றுதல் நடந்தது. சபரிமலை தலைமை தந்திரி ராஜீவரு தந்திரி தலைமை வகித்தார். இரவு, 7:00 மணியளவில் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. சனிக்கிழைமை முதல், வரும், 20 வரை பல்வேறு பூஜைகள், பகவதி சேவை, சிறப்பு பஜனை மற்றும் அன்ன தானம் நடைபெறும். நாளை, பள்ளி வேட்டை மற்றும் சயன வாசம்; 22 காலை, 6:00 மணிக்கு பள்ளி உணர்த்தல், கோ பூஜை, 10:00 மணிக்கு பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் ஆராட்டு பூஜை, மதியம், 1:00 மணிக்கு கொடியிறக்கம், கலசாபிஷேகம்
நடக்கவுள்ளது. வரும், 24 காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு அஷ்ட திரவிய மகா அபிஷேகம், 25 மாலை, 6:00 மணிக்கு மண்டல பூஜை, சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. ஜன., 14 காலை, 6:00 மணிக்கு அரங்கநாதர், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம், மாலை, 6:00 மணிக்கு கற்பூர ஆழி பிரதட்சணம் மற்றும் புஷ்பாஞ்சலி ஜோதி தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.