பதிவு செய்த நாள்
16
டிச
2017
03:12
சேலம்: சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமத்தில், 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி
கடந்த, 13ல் தொடங்கியது. அதில், உலக நன்மை வேண்டி, வெள்ளிக்கிழமை காலை, 9:00 மணிக்கு, நவாக் ஷரி மூல மந்திர ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு சுக்ரவார பிரதோஷ பூஜை, 5:00 மணிக்கு சிறப்பு சங்கீர்த்தனம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.