பதிவு செய்த நாள்
16
டிச
2017
03:12
செங்கல்பட்டு:அய்யப்பன் கோவிலில், 19ம் தேதி துவங்கி, ஆறு நாட்கள், லட்சார்ச்சனை மற்றும் ஆறாட்டு பெருவிழா, நடக்கிறது.செங்கல்பட்டில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், நத்தம் பகுதியில், அய்யப்பன் கோவில் உள்ளது.இங்கு, 19ம் தேதி, கொடியேற் றத்துடன், லட்சார்ச்சனை மற்றும் ஆறாட்டு விழா துவங்கி, ஆறு நாட்கள் நடைபெறுகிறது. விழாவில், புஷ்பாபிஷேகம், 108 சங்காபிஷேகம், 24ம் தேதி, செங்கல்பட்டு அண்ணாசலையில் உள்ள, கோதண்டராமர் கோவில் குளத்தில், அய்யப்ப சுவாமிக்கு, வருடாந்திர ஆறாட்டு விழா நடைபெறுகிறது.விழா ஏற்பாடு களை, அய்யப்பன் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்கின்றனர்.