பதிவு செய்த நாள்
18
டிச
2017
01:12
பண்பும் பாசமும் மிக்க தனுசு ராசி அன்பர்களே!
11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாயும், குருவும் நற்பலன் கொடுப்பர். விருச்சிக ராசியில் இருக்கும் சுக்கிரன் டிச. 21ல் உங்கள் ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை நடக்கும். சூரியன் 12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்தாலும் அவரால் நன்மை கிடைக்காது. புதன், ஜன. 4ல் உங்கள் ராசிக்கு வந்தாலும், அவரால் நன்மை தர இயலாது. மேலும் 8ல் உள்ள ராகு, 2-ல் உள்ள கேது, 12-ல் உள்ள சனி ஆகியோரும் நன்மை தர வாய்ப்பில்லை.
சனிபகவான் ஏழரையாக மாறினாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து நன்மைகள் கிடைக்க பெறலாம். இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். செவ்வாயால் புதிய வீடு,-மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். வீட்டில் நிம்மதி பெருமூச்சு விடலாம். டிச.21க்கு பிறகு பொருள் சேரும். டிச.26,27ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். ஆனால் ஜன.10,11ல் உறவினர்களால் நன்மை நடக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், அலைச் சலையும், பகைவர்களின் தொல்லைகளையும்சந்திக்கவேண்டி இருக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதை தள்ளிப் போடவும். பணவிஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். அதிக முதலீடு போடுவதை தவிர்க்கவும். டிச.16,17,21,22 ஜனவரி12,13-ந் தேதிகளில் போட்டியாளர்களால் பிரச்னை வரலாம். ஆனால் டிச.30,31ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் நிறைவேறும். வேலைப் பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜன.4க்கு பிறகு சிலர் இடமாற்றம் காண்பர். அது உங்களுக்கு ஆரம்பத்தில் வெறுப்பாக இருந்தாலும் பின்னர் நன்மை பயப்பதாக அமையும். ஜனவரி8,9 நன்மை தரும் நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு காரியத்தடை, பொருள் நஷ்டம் டிச.21க்கு பிறகு மறையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும். அரசியல் வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள், குருவால் சிறப்பான பலனை காணலாம். நற்பெயர் கிடைக்கும் போட்டி களில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்ப தால் அசட்டையாக இருந்து விட வேண்டாம். விவசாயிகளுக்கு சிறப்பான மாதம். எந்த பயிரும் லாபத்தை கொடுக்கும். கடலை மற்றும் கிழங்கு வகை நல்ல மகசூல் தரும். சிலர் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னே ற்றம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் புத்தாடை, நகை வாங்கி மகிழ்ச்சி அடைவர். கணவன் மற்றும் குடும்பத் தாரிடம் நன்மதிப்பை பெறுவர். வீட்டிற்கு பெருமை கிடைக்கும். பெண் பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். டிசம்பர்23,24,25-ல் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். ஜன.1,2 சிறப்பான நாட்களாக அமையும்.விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
சகோதரிகளால் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும். மாத இறுதியில் வீட்டில் சில
பிரச்னைகள் வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு.
* நல்ல நாள்: டிச. 18, 19, 20, 23, 24, 25, 30, 31 ஜன. 1, 2, 8, 9, 10, 11
* கவன நாள்: ஜன.3, 4 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 2, 3 நிறம்: சிவப்பு, மஞ்சள்
* பரிகாரம்:
● ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
● சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குங்கள்.
● செவ்வாயன்று அம்மனை வழிபடுங்கள்.