Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வீடு வாங்கலாம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) துவங்குது ஏழரை
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) துவங்குது ஏழரை

பதிவு செய்த நாள்

18 டிச
2017
01:12

எதையும் சாதிக்கும் மகர ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் கூடுதல் பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் டிச. 21வரையும், புதன் ஜன. 4 வரையும் சாதகமான இடத்தில் இருந்து நற்பலனை தருவர். அதன்பின் அவர்கள் 12-ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை குறையும். 1-ல் உள்ள கேது,7- ல் உள்ள ராகு, 10-ல் உள்ள செவ்வாய், 12ல் உள்ள சூரியனால் நன்மை கிடைக்காது. சனிபகவான் டிச.19ல், 12-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்பு போல் நற் பலனை கொடுக்க முடியாது. உங்களுக்கு ஏழரை சனி ஆரம்ப காலம். சனி12ம் இடத்தில் இருக்கும் போது, பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு வரலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்து பார்வை  மூலம் நல்ல பொருளாதார வளமும், பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார்.

புதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். சுக்கிரனால் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். பணவரவு இருக்கும். கணவன்,- மனைவி இடையே அன்பு பெருகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்பு உண்டு. சகோதரிகளால் டிச.21,22ல் கூடுதல் பலன்கள் கிடைக்கும். டிச.16,17, ஜன.12,13ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச. 28,29ல் அவர்கள் வகையில் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு. அப்போது ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால், சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு புதனால், முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். செவ்வாயால் எதிரிகளின் தொல்லை ஏற்படும். டிச.18,19,20,23,24,25ல் சந்திரனால் சற்று மந்தநிலை வரலாம்.  

ஜனவரி1,2ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். போட்டியாளர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். சூரியனால் பொருள் விரயம் ஏற்பட வாய்ப் புண்டு. எனவே பணவிஷயத்தில் கவனம் தேவை. ஜன. 4க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம்.
உங்கள் பணிகளை முடிக்க கடும் பிரயத்தனம் செய்யும் சூழல் உருவாகலாம். பணியாளர்கள் மேன்மை காண்பர். புதிய பதவி தேடி வரும். சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். ஜனவரி 10,11ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.        

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை எளிதில் பெறலாம். பணவரவு நன்றாக இருக்கும்.  டிச. 21க்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் உங்கள் செல்வாக் கிற்கு எந்த குறையும் வராது. மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரை மூலம் முன்னேற வழி காணலாம். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.  

விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை காணலாம். அதிகமாக உழைக்க வேண்டும். பயறு, பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.  ஜனவரி 3,4 சிறப்பான நாட்களாக அமையும். டிச.26,27ல் புத்தாடை, நகை வாங்கலாம்.

* நல்ல நாள்: டிச.16, 17, 21, 22, 26, 27 ஜன.1, 2, 3, 4, 10, 11, 12, 13.
* கவன நாள்: டிச. 5, 6, 7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4, 6  நிறம்: வெள்ளை , பச்சை

* பரிகாரம்:
●  ஆஞ்சநேயரை தரிசித்தல்.
●  சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்
●  தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை.

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar