Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) திருமணம் நடக்கும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வீடு வாங்கலாம்
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வீடு வாங்கலாம்

பதிவு செய்த நாள்

18 டிச
2017
01:12

எல்லோருக்கும் நன்மையை விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு வந்து நன்மை தருவார். சுக்கிரன் டிச.21க்கு பிறகு நற்பலனை கொடுப்பார். தற்போது சாதகமாக நின்று நற்பலனை தந்து கொண்டிருக்கும் புதன், தனுசுவிற்கு மாறினாலும் அவரது நற்பலன்கள் தொடரும். குருவும்,ராகுவும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பர். சனி பகவான் டிச.19ல், 11-ம் இடத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளை தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.  சூரியனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். எந்த திட்டத்தையும் தடையின்றி கச்சிதமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-, மனைவி இடையே அன்பு கூடும்.  டிச.21க்கு பிறகு  பணவரவு இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சிலர் புதிய வீடு மனை வாங்குவர். டிச.18,19,20ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன் மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.30,31ல் அவர்கள் வகையில் விரோதம் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே சற்று  ஒதுங்கி இருக்க வேண்டும். பல வகையிலும் பொருள் சேரும்.  தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவர். பொருளாதார வளம் மேம்படும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் குறைந்த முதலீட்டில் தொடங் கலாம். சிலர் வெளிநாட்டோடு வணிக தொடர்பு கொள்வர்.  ஜன.4வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். டிச.21,22,26,27ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  ஜனவரி 3,4 ல் கூடுதல் வருமானம் வரும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வுக்கு இருந்த தடை நீங்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். டிச.16,17, ஜன.12,13ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு கடந்த மாதம் இருந்த, மன உளைச்சல் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் சரியாக கிடைக்காமல் தவித்த நிலைமை மாறி சாதகமாக அமையும். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். சிறப்பான புகழோடு காணப் படுவர். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர். பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர்.

விவசாயிகள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். கால்நடை வகையில் வருவாய் கிட்டும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.  பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் உங்கள் கை ஓங்கி நிற்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள், உங்கள் மேன்மை யை அறிந்து சரணடையும் நிலை வரும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.  புதிய பதவி தேடி வரும். டிசம்பர் 28,29ல் புத்தாடை, நகை வாங்கலாம். வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கும்.

* நல்ல நாள்: டிச. 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 28, 29,  ஜன. 3, 4, 5, 6, 7, 12, 13
* கவன நாள்: ஜன. 8, 9 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1, 7, 9  நிறம்:பச்சை, வெள்ளை

* பரிகாரம்:
●  ஞாயிறு ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
●  திங்கள் அன்று கேதுவுக்கு அர்ச்சனை
●  வெள்ளிக்கிழமை முருகன் வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar