Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மார்கழி ... கோவையில் அனுமன் ஜெயந்தி: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2017
05:12

சென்னை : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள், பல மணி நேரம், நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

அனுமன் ஜெயந்தியான நேற்று, சென்னையில் உள்ள ஆஞ்சநேயருக்கு தனி கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை, நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், அனுமத் ஜெயந்தியான நேற்று, சுவாமிக்கு ஏழு கால பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மேலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, ஏலக்காய் மாலை சார்த்தப்பட்டது.

நேற்று அதிகாலை முதல், இரவு வரை, லட்சக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று, ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர். இங்கு, டிச., 23ம் தேதி, 36 அடி மூலவருக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக, வனத்துறை உதவியுடன், 36 கிலோ சந்தனம் பெறப்பட்டு, கும்பகோணத்தில் அரைக்கப்படுகிறது. டிச., 24ம் தேதி, லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதிதாசன் செய்துள்ளார். அதே போல், அசோக் நகர், மயிலாப்பூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar