பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, வீரபக்த ஆஞ்ச நேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் கந்தசாமி கோவிலின் பின்புறத்தில் உள்ள, சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு, 18 வகையான அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. 1,008 வடை மாலை சாத்தப்பட்டு வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்தார். மாலை, 5:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சுதா உட்பட பலர் செய்திருந்தனர்.
* ராசிபுரத்தில், இந்து அற நிலையத்துறைக்கு கீழ் வரும், வீர ஆஞ்சநேயர் கோவிலில், காலை, 9:00 மணிக்கு, மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு திருவீதி உலா நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பழைய நீதிமன்றம் அருகேயுள்ள, அபயகஸ்த ஆஞ்சநேயருக்கு, ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
* குமாரபாளையம், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பல்வேறு கோவில்களில், ஆஞ்சநேயருக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதேபோல், மெட்டாலா, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ப.வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆஞ்ச நேயர் கோவில்களில் சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது.