பதிவு செய்த நாள்
20
டிச
2017
01:12
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களின் பல கோவில்களில், சனிப் பெயர்ச்சி விழா, விமரிசையாக நடந்தது. சனீஸ்வர பகவான் நேற்று காலை, விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு பிரவேசமானார். அதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு ஹோமம், லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. செங்கல்பட்டு அடுத்த, திருக்கச்சூர், வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூரில் உள்ள பல கோவில்களில், சனீஸ்வரருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். காலையில் இருந்தே, ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர். - நமது நிருபர் -