பதிவு செய்த நாள்
20
டிச
2017
01:12
மதுரை: மதுரையில் ஸ்ரீஆப்தன் சபாவின் நான்காம் ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் டிச.,26 மாலை 4:30 மணிக்கு ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது. அன்று மதியம் 3:30 மணிக்கு யானையில் ஐயப்பன் பவனி மற்றும் பக்தர்கள் பேட்டை துள்ளல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு பி.வி.கே., ஹரிஹரன் தலைமையில் ஐயப்பனுக்கு நெய் அபிேஷகம், கலசாபிேஷகம், ஆரத்தி பூஜை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு என்.ஷிவானி குழுவினரின் வீணை சங்கீத ஆராதனையும், 6:30 மணிக்கு இறைவனின் தொண்டில் பக்தர்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் தமிழ் இனியன் சொற்பொழிவும் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு நாகராஜ் குழுவினரின் ஐயப்பன் பக்தி பாடல் இன்னிசை, இரவு 8:00 மணிக்கு படி பூஜை, புஷ்பாஞ்சலி நடைபெறும். பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட ஐயப்பன் படம், லட்டு, புத்தகம், காலண்டர், மினி டைரி, பிரசாதம் வழங்கப்படும். முன்பதிவிற்கு 86102 28600.