இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை தர்காவில் வரும் டிச.29 முதல் 3 நாட்கள் சந்தன உருஸ் ஊர்வலம் நடக்கிறது.இடையகோட்டையில் உள்ள தர்காவில் ஆண்டு தோறும் சந்தன உருஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாயன்று (டிச.19) கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.28 மாலை வாசனை மாலையுடன் பஹூதாத் தர்கா இரவ்லா ஷரீபின் போர்வை ஊர்வலம் நடக்கிறது. டிச.29 முதல் டிச.31 வரை 3 நாட்கள் சந்த உருஸ் ஊர்வலம் நடக்கிறது. மூன்று நாட்களிலும் இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி நடக்கிறது. மேலும் வாண வேடிக்கைகள், நாதஸ்வர இசைக் கச்சேரிகளும் நடக்க உள்ளது. பரம்பரை தர்கா டிரஸ்ட்டி சையது மீரான் ஏற்பாடுகளை செய்துள்ளார்.