பதிவு செய்த நாள்
21
டிச
2017
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், மஹா தீபம் ஏற்றிய மலை உச்சியில், பிராயச்சித்த அபிேஷகம் மற்றும் பரிகார பூஜை நடந்தது.
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவுள்ள மலையையே சிவனாக நினைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில், டிச., 2ல், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இவை தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்தன.மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுவதால், மலை உச்சியில் பக்தர்கள் ஏறிச் சென்று, மஹா தீபத்தை கண்டு வழிபட்டனர். பக்தர்கள் மலை மேல் ஏறியதற்கு, பிராயச்சித்த பரிகார பூஜை நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோயிலில், நேற்று காலை 10:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. பின், கலச நீரை மலை உச்சிக்கு கொண்டு சென்று, அங்குள்ள சுவாமியின் பாதத்தில் புனிதநீரை ஊற்றி, பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.