பதிவு செய்த நாள்
21
டிச
2017
12:12
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சாக்கிய நாயனார் குருபூஜை விழா, நேற்று நடந்தது. சாக்கிய நாயனார், பல மத நூல்களை படித்தும், பழகியும், இறுதியில் சைவ நெறியே சிறந்தது என முடிவு செய்து, சிவபெருமானை வழிபட்டு வந்தவர். நாள் தோறும், சிவ வழிபாடு முடிந்த பிறகே, உணவு அருந்தி வந்தார்.திறந்த வெளியில் அமைந்திருந்த சிவலிங்கத்தை பூஜிக்க எண்ணிய நிலையில், எதுவும் கிடைக் காததால், அங்கிருந்த கற்களை, லிங்கத்தின் மீது எறிந்து, பூஜித்தார். அன்பினால் எறிந்த கற்களை, மலர்களாக மாற்றி, சர்வேஸ்வரன் ஏற்றுக் கொண்டார். அவருக்கு, உமையம் மையுடன் சிவபெருமான் காட்சியளித்தார். இத்தகைய சிறப்பு பெற்ற சாக்கிய நாயனார் குருபூஜை, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தசாம பூஜை சிவனடியாக திருக்கூட்டம் சார்பில் நேற்று நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.