பதிவு செய்த நாள்
21
டிச
2017
12:12
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வெங்கடேசா காலனி, ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவிலில், 41வது ஆண்டு மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா, ஐயப்ப சுவாமி திருவீதி உலா வரும் 27ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, காலை, 4:00 மணிக்கு திருமதுர பூஜை, 4:15 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு அபிேஷகம், 6:00 மணிக்கு மஞ்சள் அம்மனுக்கு பூஜையும் நடக்கிறது.காலை, 10:30 மணிக்கு மண்டல பூஜை, மஞ்சள் அம்மனுக்கு தீபாராதனை, ஐயப்ப சுவாமிக்கு தீபாராதனை, 11:30 மணிக்கு மகேஸ்வர பூஜை முடிந்ததும், அன்னதானம் நடக்கிறது.
தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு மண்டல பூஜை, 6:30 மணி பஞ்ச வாத்தியத்துடன் புஷ்ப அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி, கோவை ரோடு, உடுமலை ரோடு, தேர்நிலை ரோடு, மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, பஸ்ஸ்டாண்ட், வெங்கடேசா காலனி வழியாக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை செயல் அலுவலர் ஜெயசெல்வம், தக்கார் உமா மகேஸ்வரி செய்து வருகின்றனர்.மண்டல பூஜை திருவிழாவையொட்டி, ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பா சேவா அணி சார்பில், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஐயப்பா சேவா அணி சார்பில் வரும், 25ம் தேதி மாலை, 6:30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும்; 26ம் தேதி பக்தி மெல்லிசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.வரும், 27 ம் தேதி ஐயப்ப சுவாமி கோவிலில், அன்னதான நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு, ஐயப்ப சுவாமி பரிவார மூர்த்திகள் தேர் திருவீதி உலா வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் நடக்கின்றன.* பொள்ளாச்சி அமைதி நகர் (ஜோதி நகர்) தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில், 30ம் ஆண்டு அன்னதானம் விழா வரும், 27ம் தேதி அமைதி நகர் பஸ் ஸ்டாப் அருகே நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 11:00 மணிக்கு அன்னதானம், இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, பக்தி பாடல்கள், இரவு, 10:00 மணிக்கு படிப்பாடலுடன் ஆராதனையும் நடக்கின்றன.