ஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புனித இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மேற்கொண்டனர். பெண்கள் மாவிளக்கு ஏந்தி கோயில் வளாகத்தில் வலம் சென்று அம்மனை வழிபட்டனர். 141 கிலோ அரிசி மாவினால் மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு பூஜை வழிபாடுகள் செய்து வழிபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.