பெரியகுளம் : சோத்துப்பாறை அணைப் பகுதியில் ராமர்பாதத்தில், ஐயப்பனை வைத்து நடந்தவனபோஜனம் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் அருகே சோத்துப்பாறையில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற 38 வது ’வனபோஜனம்’பூஜை நடந்தது. சோத்துப்பாறை அணையில் ராமர்பாதம் உள்ளது. பெரியகுளம் வடக்கு அக்ரஹாரம் பாலஆஞ்சநேயர் கோயிலில், ஐயப்பன் சிலைக்கு தினமும் பூஜைகள் செய்யப்படுகிறது. ஐயப்பன் சபரிமலைக்கு (வனப்பகுதிக்கு) செல்வதை நினைவு கூறும் வகையில், பால ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஐயப்பன் சிலையை சோத்துப்பாறை வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று, அங்குள்ள ராமர்பாதம் மேலே ஐயப்பன் சிலையை வைத்து, பால், தயிர், பன்னீர் உட்பட வாசனை திரவியம் அபிேஷகம் செய்யப்பட்டது. ஐயப்ப சரணம் பாடப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைஐயப்ப குருசாமிகள் ராமநாதன், ஜோதி, அருணாச்சலம், ராமர், பாலசுந்தரம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.