பதிவு செய்த நாள்
25
டிச
2017
01:12
ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் விழாவை ஒட்டி, காலை முதல் மாலை வரை நடந்த, தீர்த்தக்குட ஊர்வலத்தால், மாநகர் களை கட்டியது. ஈரோட்டின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்களில் ஒன்றான, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், பொங்கல் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால், பெரியவலசு, பாரதிரோடு, தெப்பக்குளம் வீதி, மாணிக்கம்பாளையம், அசோகபுரம், வீரபத்திர வீதி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தனித்தனிக் குழுவாகவும், பக்தி மன்றங்களின் சார்பாகவும், வைராபாளையம் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிலர், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தி வந்தனர். காலை தொடங்கி மாலை வரை நடந்த, தீர்த்த ஊர்வலம் நடந்தது. முன்னெச்சரிக்கையாக, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.