பதிவு செய்த நாள்
17
டிச
2011
11:12
மதுரை : மதுரையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூன்று நாள் பவள விழா மாநாடு, நேற்று துவங்கியது.துவக்க விழாவிற்கு மதுரை ஆதீனம் தலைமை வகித்தார். பிரம்மா குமாரிகள் துணை மண்டல பொறுப்பாளர் மீனாட்சி பேசியதாவது: மக்களுக்கு இறைவன் யார் என்று தெரியாது. அவர்கள் அமைதியின்றி அவரை தேடி அலைகின்றனர். அதர்மம் தலை தூக்கியுள்ள இக்காலத்தில் அவர் உலகிற்கு வருவார். இறைவன் செம்பொன் ஜோதியாக இருக்கிறார். இறைவனை அறிந்தால் தான் சுகம்பெற முடியும். நிரந்த அமைதியும் கிட்டும். விஞ்ஞானம் போன்ற எத்தனை சக்திகள் உருவாகினாலும், அனைத்திலும் உயர்ந்தது ஆன்மிக சக்திதான். இச்சக்தி இறைவன்தான், என்றார். ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., அரவிந்த் கண்ஆஸ்பத்திரி தலைவர் நம்பெருமாள்சாமி, சர்வோதய இலக்கிய பண்ணை தலைவர் மாரியப்பன், காந்தி மியூசிய செயலாளர் ரங்கசாமி பங்கேற்றனர். மாநாட்டையொட்டி கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று "ஆன்மிகம் சமுதாய மாற்றத்திற்கான அடிப்படை என்ற பொருளில் மாநாடு நடக்கிறது. பிரம்மா குமாரிகள் மீடியா பிரிவு துணைத் தலைவர் பி.கே.கருணா மற்றும் பலர் பங்கேற்கின்றனர். நாளை (டிச., 18) ஒரே இறைவன், ஒரே உலகம் என்ற பொருளில் நடக்கும் மாநாட்டில், தலைமையிட நிர்வாகி நிர்மலா, ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன், அமைச்சர் ராஜூ, ராம்கோ சேர்மன் ராமசுப்ரமணியராஜா பங்கேற்கவுள்ளனர்.