பதிவு செய்த நாள்
25
டிச
2017
01:12
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ராஜவிநாயகர் கோவிலில் சிறப்பு மகா யாகங்கள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. ராஜவிநாயகர் மற்றும் சனீஸ்வரனுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சள், அரிசி மாவு, சந்தனம், பன்னீர், தேன், இளநீர், கரும்பு சாறு எலுமிச்சை, நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின், சிறப்பு மகா யாகம், சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில், பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட வேண்டி வழிபட்டனர்.