நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள்பாலிக்கும் சிறப்பு பெற்றது சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். இங்கு மார்கழி பெருந்திருவிழா நேற்று காலை 7.30-க்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எல்லா நாட்களிலும் காலையிலும், இரவிலும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு 10.30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமாலை குமாரசுவாமி, தனது தாய் தந்தை வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவருவது மக்கள்மார் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.2018 ஜன., ஒன்றாம் தேதி காலை 9.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சப்தவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.